பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

டி.ஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னஸ் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'அலங்கு'. குணாநிதி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 'உறுமீன், பயணிகள் கவனிக்கவும்' ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார். இவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து மற்றும், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
இப்படத்தில் நாய் ஒன்றும் முக்கியமான கதாபாத்திரமாக நடித்துள்ளது. படம் பற்றி இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் கூறியதாவது: நாய்களை நேசிப்போர் சமூகம் இன்று மிகப்பெரியது. அப்படி மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இருக்கும் பாசம், உறவு எப்படி ஒரு சம்பவத்தின் மூலம் ஒரு பகையாக, மோதலாக மாறுகிறது. அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களின் விறுவிறுப்பே திரைக்கதையின் பிரதானம். படத்தின் 95 சதவீத காட்சிகள் அடர் வனப்பகுதிகளில் படமாக்கி இருக்கிறோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.




